Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா

Anushka to star again in famous director film

பல படங்களில் பிசியாக நடித்து வந்த அனுஷ்கா, தனது உடல் எடை கூடிய பின் திரைப்படங்களில் நடிக்காமல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தீவிரமான உடற்பயிற்சியை, தான் மட்டுமல்லாமல் தன்னுடைய திரையுலகத் தோழிகள் பலருடன் செய்து வந்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான், அனுஷ்காவின் கடைசி வெற்றிப் படம்.

இந்த நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் அனுஷ்கா. ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திரு மகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் விஜய் இயக்கத்தில் கமர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.