நம் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்க ஆப்பிள் பெருமளவில் உதவுகிறது.
பொதுவாக நாம் உண்ணும் பழங்களில் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று ஆப்பிள். ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் படிப்படியாக கொலஸ்ட்ரால் குறையும்.
பொதுவாக ஆப்பிளை காலையில் சாப்பிடுவது சிறந்தது. கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் வேக வைத்து சாப்பிட்டால் பலன் அதிகம் கிடைக்கும்.
உடல் எடையை மற்றும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உலர் பழங்களை தேர்ந்தெடுத்து நாம் அதிகமாக சாப்பிடும்போது கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
தினமும் நாம் உண்ணும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் கூடும் ஏனெனில் தயிரில் பொட்டாசியம் ஜிங் மெக்னீசியம் புரதம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது என அனைவரும் அறிந்தது.
அசைவ உணவுகளை அதிகமாக சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும் ஏனெனில் இறைச்சியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் கொழுப்பை அதிகரிக்கும்.
மேலும் நாம் பழ வகைகளான பெர்ரி ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கவும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் நமக்கு பெருமளவில் உதவுகிறது.