Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்தை அறிவித்த ஏ.ஆர் ரகுமான் மனைவி.. அதிர்ச்சியால் ரசிகர்கள்..!

AR Rahman's wife who announced the divorce

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சாய்ரா பானு என்ற மனைவியும்,இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மனைவி சாய்ரா வழக்கறிஞர் சார்பில் ஏ ஆர் ரகுமானுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா தனது கணவர் ஏ ஆர் ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவெளியை தொடர்ந்து வலி மற்றும் வேதனையும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் முப்பது ஆண்டை எட்டுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாக தெரிகிறது கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கணத்தில் நடுங்க கூடும் இன்னும் இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தை தேடுகிறோம்.எங்கள் நண்பர்களுக்கு இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது உங்கள் கருணைக்கும் எங்கள் தனி உரிமைக்கும் மதிப்பளித்ததற்கு நன்றி என்று பதிவிட்டு #arrsairaabreakup என்று பதிவிட்டுள்ளார்.

29 வருட திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.