Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உலக அளவில் சாதனை படைத்த அரபிக் குத்து பாடல்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

Arabic Kuthu Song Record in YouTube

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் தொடர்ந்து பெரும் சாதனை படைத்து வரும் இந்த படம் தற்போது வரை 4 மில்லியன் லைக்குகள் பெற்று உலக அளவில் குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற வீடியோவாக சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையால் தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது என சொல்லப்படுகிறது. படத்தின் இறுதியில் பாடலை சேர்க்கவே படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு புதிதாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Arabic Kuthu Song Record in YouTube

Arabic Kuthu Song Record in YouTube