Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா – மேலும் படப்பிடிப்பில் 22 தொற்று

முன்னணி தொலைக்காட்சியில் மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்கள் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளிட்ட தொடர்களை கூறலாம். அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் தான் அரண்மனைக்கிளி. இத்தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மோனிஷா.

தற்போது அரண்மனைகிளி தொடர் ஒளிபரப்பு ஆகாத நிலையில், மலையாள தொடர் ஒன்றில் நடித்து வருகிறாராம் நடிகை மோனிஷா.

இந்நிலையில் படப்பிடிப்பின் பொது நடிகை மோனிஷாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் படப்பிடிப்பில் இருந்து 22 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த தொடரின் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறுகின்றனர்.