தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. முதல் வாரமே அனன்யா மற்றும் பவா செல்லதுரை என இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.
இதனால் இந்த இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற அப்போது தற்போது ராஜா ராணி 2 சீரியல் பிரபலம் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.