தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்தார். 2வது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகிய அவர் நிரந்தரமாக விலகி கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக புதுமுக நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆனால் இவருடைய நடிப்பு சந்தியா அளவிற்கு இல்லை என கூறி வருகின்றனர். இதன் காரணமாக ராஜா ராணி 2 சீரியல் கொஞ்சம் டிஆர்பியில் சறுக்கத்தை சந்தித்துள்ளது.
இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து மேலும் ஒரு முக்கிய நடிகை விலக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆமா வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆல்யா மானசாவுக்கு அடுத்ததாக ராஜா ராணி சீரியல் பெரிய பலம் என்றால் அது அர்ச்சனா தான் என கூறலாம். அப்படி இருக்கையில் தற்போது இவரும் விலக இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அர்ச்சனாவுக்கு பதிலாக யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.