தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பணியாற்றி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவருடைய மகள் சாரா டாக்டர் படத்தில் நடித்திருந்தது மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதன் பிறகு விஜய் டிவியில் மீண்டும் அம்மாவுடன் இணைந்து தாயில்லாமல் நானில்லை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அர்ச்சனாவை போலவே அவரது மகளும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா என சாராவிடம் கேட்டுள்ளார்.
இதற்கு அர்ச்சனா ஒரு பதினைந்து வருடம் கழித்து அப்பா மகள் என்னிடம் வந்து பேச சொல்லுப்பா என பதிலளித்துள்ளார். இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Archana's response to someone who proposed her daughter Zaara 😂😂😂😂 pic.twitter.com/0QBZ0TvbiW
— Anbu (@Mysteri13472103) April 9, 2022