உயரம் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் அதிகமாக ஜங்க் ஃபுட்டையை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அது உடலுக்கு நல்லது கிடையாது. இது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பதற்கும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமான முறையில் குழந்தையின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
உணவில் சிக்கன் சேர்த்து கொடுத்தால் நல்லது. ஏனெனில் இதில் புரதம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளை வலுப்படுத்தவும் செல்களை விரிவுபடுத்தவும் உதவுகிறது.
மேலும் உணவில் பால் தயிர் சம்பந்தப்பட்ட உணவுகளை கொடுப்பது மிகவும் சிறந்தது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
குறிப்பாக மிக முக்கியமாக உணவில் பீன்ஸ் சேர்ப்பது நல்லது. இது செல் மற்றும் திசு வளர்ச்சியை உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் கீரை மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உடம்பில் குறையும் பற்றாக்குறையை தீர்ப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பழங்கள் கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகவே கருதப்படுகிறது.
எனவே ஆரோக்கியம் மற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜங் ஃபுட்டுக்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களை கொடுக்க வேண்டும்.