மவுத் வாஷ் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள மவுத் வாஷ் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது தீங்கையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்து விடுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது பயன்படுத்துவதன் மூலம் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கவும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறனும் இதற்கு உண்டு.
மவுத்வாஷ் அதிகம் பயன்படுத்தும் போது வாயில் வறட்சி ஏற்படும் ஏனெனில் இதில் ஆல்கஹால் கலந்திருப்பது காரணமாக இருக்கலாம். நாளைக்கு ஒன்றிலிருந்து இரண்டு முறை மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு 55 சதவீதம் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
சிலருக்கு எரிச்சல் உணர்வும் வலியும் வரக்கூடும். அப்படி உணரும்போது மௌத்வாஷை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக இது புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவது முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இதை அளவாக பயன்படுத்துவது நல்லது.
மேலும் அதிகப்படியான மௌத்வாஷ் பற்களில் கறைகளையும் ஏற்படுத்தி விடும். எனவே அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம்.