பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா என தெளிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் முட்டையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் முட்டையில் அதிகப்படியான சத்துக்கள் இருப்பதால் தான். ஆனால் சிலர் முட்டையை பச்சையாக குடிப்பார்கள் ஆனால் இது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்காது. முட்டையை வேகவைத்து சாப்பிடுவதே சிறந்த உணவு முறையாகும்.
முட்டையை பச்சையாக சாப்பிட்டால் அதில் உள்ள திரவம் நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வயிற்றுப்போக்கு அரிப்பு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் நம் உடலில் வைட்டமின் பி7 குறைபாட்டை ஏற்படுத்திவிடும். முட்டையில் இருக்கும் வெள்ளை நிற திரவத்தை அப்படியே சாப்பிடும்போது பயோட்டினை உறிஞ்சி விடும். அப்படி நடந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் மேலும் சிறுநீரகப் பிரச்சனைகளும் வரக்கூடும்.
கோழிகளின் குடலில் இருக்கும் பாக்டீரியா முட்டை ஓட்டின் உள் மற்றும் வெளிப்பகுதியில் இருக்கும்.அதனால் தான் முட்டையை அதிக வெப்ப நிலையில் வேக வைத்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியாக்களால் நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே பச்சை முட்டையாக குடிப்பதை தவிர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிடுவதே நம் உடலுக்கு சிறந்தது.