இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகள் எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
சர்க்கரை நோய் பொதுவாகவே அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் பொதுவாகவே உள்ளது. அப்படி பயன்படுத்தும் பொழுது உணவு முறைகளையும் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
மேலும் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
மேலும் சுவையூட்டப்பட்ட செயற்கை சர்க்கரை சேர்த்து சாப்பிடும் தயிரை தவிர்க்க வேண்டும். பதிலாக சாதாரணமான முறையில் பயன்படுத்தலாம்.
மேலும் ரெடிமேட் ஸ்மூத்திகளை வாங்கும்போது நார்ச்சத்து பழச்சாறுகளை பயன்படுத்த முடியாது. உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு அதிகமாகும்.
ஊட்டச்சத்து குறைவாக உள்ள தானியங்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள தானியங்களை தான் பயன்படுத்த வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் அரிசி உருளைக்கிழங்கு மைதா ரொட்டி போன்ற உணவுகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது அது ரத்த சர்க்கரையை அதிகரித்து விடும்.எனவே இந்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.