தலைவலி அதிகம் உள்ளவர்களுக்கு அதிலிருந்து விடுபட நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் நோய்களில் ஒன்று தலைவலி. சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அந்த நாள் முழுவதும் தலைவலி அளவதிப்படுவார்கள். இதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்.
காலையில் தலைவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தண்ணீர் சத்து பற்றாக்குறை தான். அதிகமாக மது அருந்துவது மற்றும் அதிகமான மன அழுத்தம் இருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி வரக்கூடும்.
தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் போதுமான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காலையில் நெற்றியில் ஐஸ் கட்டி வைத்து தேய்த்து வர வேண்டும்.
மேலும் காலையில் எழுந்தவுடன் மன அழுத்தத்தை மேற்கொண்டால் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு சிலருக்கு கழுத்து மற்றும் தலைக்கு இடையில் ஹீட்டிங் பேட் வைத்தால் சிறந்த நிவாரணமாக இருக்கும்.