உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வெயில் காலங்களில் பெரும்பாலானோர் பழச்சாறு குடிப்பதை விரும்புவர். அப்படி அனைவரும் விரும்பும் பழச்சாறுகளில் ஒன்று ஆரஞ்சு ஜூஸ்.
ஏனெனில் ஆரஞ்சு பழச்சாற்றில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் உடல் எடையை குறைப்பவர்கள் ஏன் ஆரஞ்சு பழ ஜூஸை குடிக்க கூடாது என்று பார்க்கலாம்.
ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது சர்க்கரை அதிகமாக கலக்கப்படும் இதனால் நம் உடலில் கூடுதல் கலோரி அதிகமாகும்.
ஆரஞ்சு ஜூஸ் வேகமாக குடிக்கும் போது ஒரே நேரத்தில் சர்க்கரையை உடல் ஏற்றுக்கொள்ள முடியாது இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகும். மேலும் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் டைப் 2 நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.