தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியா விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் கோபி.
இப்படி சீரியல் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் பாக்யாவின் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆரியன். இவருக்கு செம்பருத்தி சீரியல் ஷபானாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
இந்த சீரியலில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் தான். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். படங்களில் நடிக்கவும் அல்லது சீரியலில் ஹீரோவாக நடிக்கவும் முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளார் ஆரியன்.
பிறகு இவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் வேறு ஒரு நடிகர் நடிக்க ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
