திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கிலும் பிரம்மாண்ட நாயகன் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆகவும் மற்றும் ஸ்ரீனிவாசன் வேதவன் மகா விஷ்ணு ஆகிய வேடங்களில் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
தெலுங்கில் அதிகமா கிருஷ்ணர் வேடத்தை ஏற்று நடித்து புகழ்பெற்றவர் என்.டி.ராமாராவ், அவருக்குப் பிறகு அந்த வேடத்தை முழுமையாக ஏற்று நடித்திருக்கும் இளம் நடிகர் ஆரியன் ஷாம். இதில் மகாலட்சுமியாக அதிதியும் ஸ்ரீ பத்மாவதி தேவியாக சந்தியா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.
இந்தத்திரைப்படத்தை சீரடி சாய்பாபா ரமண மகரிஷி ராமகிருஷ்ண பரமஹம்சர் போதேந்திர போன்ற இந்தியாவின் தலைச்சிறந்த மகான் பற்றி பல நாடகங்களை நடத்திய கலைமாமணி திருமதி ஞானம் பாலசுப்பிரமணியம் (பம்பாய் ஞானம்) இயக்கியிருக்கிறார்.