Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பார்த்துப் பார்த்து இசை வடிவம் கொடுத்திருக்கிறோம்.. பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசிய ஏ ஆர் ரகுமான்

arrahman about ponniyin selvan movie

கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்கு அமைத்து இருந்தனர். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பாடல் மற்றும் டிரைலரை வெளியிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இவ்விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, “இந்த படத்துக்காக தோடி உள்பட எத்தனையோ ராகத்தில் பாடலும், இசையும் அமைத்து மணிரத்னத்திடம் போட்டு காண்பித்தேன்.

ஆனால் அவர் அதை ஏற்கவே இல்லை. சில விஷயங்களை கற்பனை செய்து, தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து இசையமைத்தேன். இடையிடையே சின்ன சின்ன அரபிக் டச் கொடுத்து இசையமைத்தேன். மணிரத்னத்திடம் போட்டு காட்டினேன். ஒரு மாதம் கழித்து அவர் ஓ.கே. என்றார். அப்படி இந்த படத்துக்கு பார்த்து பார்த்து இசை வடிவம் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

arrahman about ponniyin selvan movie
arrahman about ponniyin selvan movie