Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏ ஆர் ரகுமான் இயக்கிய லீ மஸ்க் படத்தை பார்த்த ரஜினிகாந்த். வைரலாகும் பதிவு

arrahman in LeMusk movie watching rajinikanth

கோலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் ஏ ஆர் ரகுமானை சந்தித்த ரஜினி அவர் முதல் முதலில் இயக்கிய “லீ மஸ்க்” திரைப்படத்தை கண்டு களித்துள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்க்கும் ரஜினியின் புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.