Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக மரணம்.. சோகத்தில் திரையுலகம்

art-director-milan-passes-away

2006-ஆம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இவர் வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதாவது, இன்று அதிகாலை மிலன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பாதிவழியிலேயே மிலன் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.”,

art-director-milan-passes-away
art-director-milan-passes-away