விஜய் அஜித்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன்.தமிழ் சினிமாவின் 1980களில் நடிகராக வலம் வந்தவர் அருண்பாண்டியன். இவர் தற்போது தயாரிப்பாளராக தொடங்கி பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். நடிகை ரம்யா பாண்டியன் சித்தப்பாவான இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் திரையுலகில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அஜித், விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். இது போன்ற பெரிய நடிகர்கள் சம்பளம் அதிகமாக வாங்குகின்றனர். படத்தின் பட்ஜெட் ரூ 90 சதவீதம் இவர்கள் சம்பளத்திற்குச் சென்று விடுகிறது. 10 சதவீதம்தான் படத்திற்காக செலவு செய்யப்படுகிறது.
இதனால் மற்ற சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமா பின்தங்கி உள்ளது என்று கூறியுள்ளார்
