தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷ்நி ஹரிப்ரியன் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில் பாரதியாக நடித்துவரும் அருண் பிரசாத் அவர்களும் விலக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக பிக் பாஸ் சஞ்சீவ் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.