Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா அருண் ராஜா காமராஜா.. லேட்டஸ்ட் தகவல் இதோ

arun-raja-kamaraj-in-second-marriage update

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் அருண் ராஜா காமராஜா. காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் கனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதி வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறார்.

இவருடைய மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் உயிரிழந்த நிலையில் தற்போது அருண் ராஜா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி இவருக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மணப்பெண் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் விரைவில் திருமணம் நடந்தது குறித்து அறிவிப்பை அருண் ராஜா வெளியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாகும்.

 arun-raja-kamaraj-in-second-marriage update

arun-raja-kamaraj-in-second-marriage update