தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிய இவருக்கு அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் அருண் விஜய். மேலும் நடிப்பை தாண்டி தன்னுடைய உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுபவர்.
இதனால் தனக்கு கிடைக்கும் நேரங்களை எல்லாம் ஜிம்மிலேயே செலவிட்டு வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஜிம்முக்கு செல்ல முடியாமல் இருந்து வருகிறார்.
இருப்பினும் வீட்டிலேயே தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அருண் விஜய் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதை மிஸ் செய்ததாக கூறி கடுமையாகவும் வெறித்தனமாகவும் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.