Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் யானை படத்தின் புதிய போஸ்டர்

arun vijay movie details

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தான் அருண் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “O My Dog”திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் தான் “யானை”.

அருண் விஜய்யின் 33வது படமான இந்த “யானை” படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக யோகி பாபு, அம்மு அபிராமி, புகழ், பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் தயாராகியிருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் இப்படத்தை வெளியிடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் ஜூலை 1ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படம் சென்சார் போர்டில் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரத்தியேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

arun vijay movie details
arun vijay movie details