Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க போவது யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் தகவல்

arun-vijay-replace-suriya-in-vanangaan movie

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் தொடங்கினார்.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்கள் நடந்து வந்த நிலையில் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் இந்த படத்தை தயாரிக்கும் முயற்சியை கைவிடுவதாகும் தகவல் வெளியானது.

இதனையடுத்து சூர்யாவுக்கு பதில் இந்த படத்தில் அதர்வா நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சூர்யாவுக்கு பதிலாக நடிக்கப் போவது அதர்வாய் இல்லை அருண் விஜய் தான் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

arun-vijay-replace-suriya-in-vanangaan movie
arun-vijay-replace-suriya-in-vanangaan movie