Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“மக்களுடன் அமர்ந்து படம் பார்த்தது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது”: அருண் விஜய்

arun-vijay-watched-mission-chapter-1-movie

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படம் புதுவை பி.வி.ஆர். சினிமாவில் வெளியானது. புதுச்சேரி வந்த நடிகர் அருண்விஜய் ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். பின்னர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்தனர்.நடிகர் அருண் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-‘மிஷன் சாப்டர் -1’ படத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை மிஷன் பொங்கலாக கொண்டாடி வருகிறோம். படம் வெளியாகி உள்ள தியேட்டர்களை அதிகப்படுத்த உள்ளோம். வரும் காலங்களில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளேன். அடுத்து இயக்குனர் பாலாவின் ‘வணங்கான்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

இந்த திரைப்படம் எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். புதுவை மக்களுடன் அமர்ந்து படம் பார்த்தது ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் சூப்பராக இருக்கிறது என்று சொல்லும் போது ஏற்படும் சந்தோஷம் வேறு ஏதும் இல்லை.நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது நல்ல விஷயம். அது அவருக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும். ஏனென்றால் சங்கத்தை மீட்டு கொடுத்தது விஜயகாந்த் தான் என்றார்.

arun-vijay-watched-mission-chapter-1-movie
arun-vijay-watched-mission-chapter-1-movie