தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் தற்போது ஜெர்மன் நாட்டில் குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருகிறார். இப்போது அவர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா தன்னிடத்தில் கூறினார் என்றும் தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.