Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திகில் கிளப்பும் மை டியர் லிசா – வைரலாகும் மோஷன் போஸ்டர்!

My Dear Lisa Motion Poster

ஆர்யா வெளியிட்டுள்ள மை டியர் லிசா படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் “மை டியர் லிசா” எனும் புதிய திரைப்படம் வெளிவர தயார் நிலையிலுள்ளது .

இப்படத்தில் விஜய் வசந்த், சாந்தினி, சிங்கம் புலி,ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் “மைடியர் லிசா”.

நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை ஆர்யா வெளியிடுவார் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் திகில் கிளப்பி வருகிறது.

வெங்கட் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.