Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷபானா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவிற்கு கியூட் கமெண்ட் போட்ட ஆரியன்

Aryan Comment on Shabana Reels Video viral

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து அதிலிருந்து வெளியேறிய ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரியன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் கலர் புடவையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ஆரியன் ஹா.. க்யூட் என்ன முத்த எமோஜிகளோடு கமெண்ட் செய்துள்ளார்.

ரசிகர்களை பிளாக் கலர் புடவையில் ஷபானா செம க்யூட் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.