சூது கவ்வும் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அசோக் செல்வன். அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இந்த இறுதியாக வெளியான போர் தொழில் என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் நடிகருமான அருண் பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று உள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.