குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின். இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
ஆம், தற்போது என்ன சொல்ல போகிறாய் எனும் படத்தில் நடித்துள்ள முடித்துள்ள அஷ்வின், சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
சமீபத்தில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அஷ்வின் ” எனக்கு கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிடுவேன். கிட்டத்திட்ட இதுவரை நான் 40 கதைகள் கேட்டிருக்கேன். அந்த 40 கதைகள் கேட்டு நான் தூங்கிட்டேன்.
நான் தூங்காத ஒரே ஒரு கதை, இந்த படத்தோட இயக்குநர் ஹரிஹரன் சொன்ன கதை மட்டும் தான். நான் அவர்கிட்ட சொன்னேன், நான் இந்த கதை கேட்கும்போது தூங்கல. அதுனால நான் இந்த படத்துல கண்டிப்பா நடிக்குறேன் ” என்று பேசியிருந்தார். அஷ்வின் பேசிய இந்த விஷயம் இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து நெட்டிசன்கள் அஷ்வினை கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சையை இன்னும் ஓயாத நிலையில், அடுத்ததாக அஷ்வின் குறித்து ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. சமீபத்தில், ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநர் ஒருவர் கதை சொல்லியிருக்கிறார்.