குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் பவித்ராவும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். புகழ் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஸ்வின் உடன் புகழும் இணைந்து நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியதாவது: “இது முற்றிலும் காதலை மையமாக கொண்ட காமெடி படம். கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் தயாரிப்பாளர் அவரை பரிந்துரைத்தார். இப்படத்திற்கு பின் புகழ், காமெடியில் தனக்கான இடத்தை பிடிப்பார். தற்போது நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. மே மாத இறுதியில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம்” என்றார்.
முதன்முறையாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ள அஸ்வின், எல்லாப் புகழும் இறைவனுக்கே என குறிப்பிட்டு ஒரு வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
View this post on Instagram