Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் குருதி ஆட்டம் படக்குழுவினரை புகழ்ந்து பேசிய அதர்வா..

atharva about kuruthi aattam movie team

அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குனரான ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இதில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து அதர்வா சமீபத்தில் பேத்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

அதில் அவர் இந்த படம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களால் தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கணேஷ் இந்த கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஸ்ரீ கணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இயக்குனர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 5-ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார். இவர் பேசியுள்ள இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது.

atharva about kuruthi aattam movie team
atharva about kuruthi aattam movie team