தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். ‘மரகத நாணயம்’ படத்தைப் போன்று இதுவும் திரில்லர் காமெடி படமாக உருவாகி வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.