மறைந்த நடிகர் முரளி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்.
அவரது படங்கள் பல ரசிகர்களின் பேவரெட் லிஸ்டில் உள்ளது. முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் அதர்வா. இவர் தனக்கு என்று ஒரு பெயரை உருவாக்க கடினமாக உழைத்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் தான் இவரது தம்பி ஆகாஷிற்கு, சினேகா என்பவருடன் திருமணம் நடந்தது.
தற்போது வந்த தகவல் என்னவென்றால் அடுத்த வருடம் ஜனவரியில் அதர்வாவிற்கு திருமணம் என்று கூறப்படுகிறது.
அவர் கோவாவில் இருக்கும் பெண் ஒருவருடன் காதலில் விழுந்ததாகவும் விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் என்றும் கூறுகின்றனர்.