Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷாருக்கான் மற்றும் விஜய் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட அட்லி.. வைரலாகும் பதிவு

atlee about vijay and sharukhan

“தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ, மெர்சல், தெறி, பிகில் என விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து ஒட்டுமொத்த பாலிவுட் படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது. இந்த வெற்றி மூலம் அட்லீ உலக புகழ் பெற்ற இயக்குனராக இடம்பெற்றுள்ளார்.இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கான் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, விஜய் – ஷாருக்கான் இருவரில், ஒருவர் என்னுடைய அம்மா. ஒருவர் என்னுடைய மனைவி. இரண்டு பேர் இல்லாமலும் நம்மால் வாழமுடியாது. இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் விஜய் சார் தான்.

அவர் எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். நான் அவருக்கு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை மிகவும் நம்பினார். ஷாருக்கான் படம் நடிக்க நினைத்தால் உலகத்தில் உள்ள எத்தனையோ இயக்குனர்கள் வருவார்கள். ஆனால் அவர் என்னை நம்பினார். இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவரது நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும் அன்புடனும் படத்தை செய்ய வைத்தது\” என்று பேசினார்.”,

atlee about vijay and sharukhan
atlee about vijay and sharukhan