தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது பாலிவுட் படங்களையும் இயக்கத் தொடங்கி பிஸியாக இருந்து வருகிறார்.
இவர் தற்போது அம்பானி வீட்டு திருமணத்தில் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது மனைவி பிரியாவின் முதுகில் மணமகன், மணமகள் பெயரை எழுதி அம்பானி வீட்டு திருமணம் குறித்து விளம்பரம் செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.