Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் புதிய படத்தை இயக்கும் அட்லீ

atlee next to direct salman khan movie

கோலிவுட்ல பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அட்லீ. ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது இவர் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கான் வைத்து ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நடிகை நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக இயக்கம் இருக்கும் புதிய படத்தில் மீண்டும் பாலிவுட் நடிகரான சல்மான் கானை வைத்து இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் அட்லீ சல்மான் கானை நேரில் சந்தித்து காமெடி படத்துக்கான ஒரு கதையை கூறி இருக்கிறார். அந்தக் கதை சல்மான் கானுக்கு மிகவும் பிடித்துப் போனதால் உடனடியாக அவர் ஓகே சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

atlee next to direct salman khan movie
atlee next to direct salman khan movie