தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ராமராஜ். இந்தப் படத்தில் போலீஸ் வேடத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்னதாக கூட்டுறவுத்துறை வங்கியில் மேலாளராக பணியாற்றிய இவர் ஓய்வு பெற்ற பிறகு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கடந்த சில தினங்களாக உடல்நிலை கொஞ்சம் மோசமடைந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
