நம் சென்னை மாநகரில் உள்ள மிக சிறந்த திரையரங்குகளில் ஒன்றாகும் ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம்.
இந்த திரையரங்கம் ஒற்றை திரை கொண்டதாக இருந்தாலும் கூட குடும்பங்கள் கொண்டடடும் தியேட்டராக விளங்கியது.
ஆம் டிக்கெட் மற்றும் நொறுக்கு தீனிகள், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை இந்த தியேட்டரில் மட்டும் தான் மிகவும் ஞாயமான விலைக்கு கிடைக்கும்.
மேலும் ரசிகர்கள் மட்டுமல்ல குடும்பங்கள் கொண்டாடும் தியேட்டர் என்று கண்டிப்பாக ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டரை கூறலாம்.
அப்படிப்பட்ட தியேட்டர் தற்போது கொரோனா காரணமாக இனி நிரந்தரமாக மூட போவதாக தியேட்டரின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.