Tamilstar
Health

கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை குறைக்கும் அவகேடோ பழம் !

அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.

அவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.

அவகேடோ பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் சரிசெய்யும்.

அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது. எனவே இப்பழத்தை டயட்டில் சேர்த்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே எந்த ஒரு சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க, அவகேடோ பழத்தை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.

அவகேடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும். மேலும் வேறு சில கண் பார்வை பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.