கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய அனைத்து படங்களும் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருக்கும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் படங்களை இயக்கி வருவதாக சமீபத்தில் கூறியிருக்கிறார். அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வரை இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் போதைப் பொருட்களை பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் சமீபத்தில் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் தற்போது போதை பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகிறது. முற்றிலும் தடுக்க தான் எல்லாரும் முயற்சி செய்கிறோம் என்னுடைய படத்தில் போதைப்பொருட்கள் குறித்து கூறுவதின் காரணமும் இதுதான். அதனை தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். இதனால் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என்பது தான் எனது நம்பிக்கை. அதற்காக தான் என் படங்களில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.