Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உலகளவில் அயலான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? படக்குழு அறிவிப்பு

ayalaan-movie-collection-update viral

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’ தான்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அயலான் போஸ்டர்இந்நிலையில், ‘அயலான்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அயலான்’ திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ‘காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.