ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அயலான்’ திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், ‘அயலான்’ படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.’அயலான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Only 30 Days to go for the arrival👽🛸
Our otherworldly friend, #Ayalaan will visit you all on Jan 12, 2024🔥2nd single coming real soon!#AyalaanFromPongal🎇 #AyalaanFromSankranti🎆#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @arrahman @Ravikumar_Dir… pic.twitter.com/bp2jEwEfWw
— KJR Studios (@kjr_studios) December 13, 2023