தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விக்ரமன் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அசீம் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.
அசீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு டைட்டில் வின்னர் அசீம் தனது முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.
தன்னுடைய மகனுடன் பிக் பாஸ் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனது உயரம் உனது இலக்கல்ல நீ உயரணும் என்பது எனது இலக்கு என பதிவு செய்துள்ளார். இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் என தன்னுடைய மகனுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களும் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் இதுகுறித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram