பாகுபலி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திகைக்கவைத்த ஒரு படம். ராஜமௌலி இயக்கத்தில் இரண்டுபாகங்களாக வெளியான இப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனையை பெற்றது. பிற நாட்டு மொழிகளிலும் இப்படம் வெளியானது.
பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, நாசர், சத்ய்ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இதில் கட்டப்பா கதாபாத்திரம் கதையில் யாரும் எதிர்பாராத டிவிஸ்டை கிளைமாக்ஸில் வைத்திருந்தது. சத்யராஜ் இதில் நடிக்க முதல் பாகம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொல்ல வேண்டும் என்ற கேள்வியுடன் முடிய 2 ம் பாகம் பதிலாய் அமைந்தது.
இந்த வேடத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்தை தான் அணுகினார்களாம். ஆனால் அவர் சிறையில் இருந்ததால் வெளியே அழைத்துவர முயற்சி செய்தும், முடியாமல் போனதால் பின்னர் சத்யராஜை தேர்வு செய்ததாக கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.