Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிராமத்து பெண்ணாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.

baakiyalakshimi reshma-in-village-style-getup

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் தோழியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபட்டி.

தொகுப்பாளராக செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலம் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சீரியல்களிலும் தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார்.

குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடித்து வரும் ராதிகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கிராமத்து ஸ்டைலில் செம நாட்டு கட்டை என சொல்லும் அளவிற்கு போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.