Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோவமாக பேசிய கோபி, பதிலடி கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial epiosde update 28-08-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியிடம் கோபி பேச வீட்ல நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் என்று கோபியை பேச அந்த நேரம் பார்த்து ராமமூர்த்தி வந்து என்ன தனியா சமாதானம் பண்ண பார்க்கிறானா என்று கேட்க இல்லப்பா என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கிருந்து ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.

எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் ராமமூர்த்தி அமைதியாக இருக்கிறார். ஏன் எனக் கேட்க என் வயதில் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு பிரச்சனை இருக்கும் ஆனால் எனக்கு 80ஆவது பிறந்த நாளை நீங்கள் எல்லாரும் கொண்டாடிட்டு இருக்கீங்க அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பேசுகிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நீங்கள் தான் எங்களை வழி நடத்துகிறீர்கள் என்று ஆறுதலாக பேசுகின்றனர். மறுபக்கம் ஈஸ்வரி ,கோபி இனியா இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்து கொண்டதற்கு காரணம் நீதான் என்று பேசியதை நினைத்து கண்கலங்குகிறார். இனி யார் கிட்ட பேசினாலும் இல்லைனாலும் இனியா கிட்ட பேசணும் என்று நினைக்கிறார் கோபி.

எழில் கிளம்பலாம் என்று அமிர்தாவிடம் கேட்க அதை கவனித்த பாக்யா எல்லாரும் சாப்பிடலாம் மாமா என்று கூப்பிடுகிறார். ஆனால் இனியா இன்னைக்கு தாத்தாவின் பிறந்த நாள் என்பதால் தாத்தாவின் கையால் சாப்பிடலாம் என்று சொல்ல ராமமூர்த்தி எனக்கு சாப்பிடலாம் சமைக்க தெரியாதுமா என்று சொல்லுகிறார். ஆனால் எழில் அப்படி இல்ல தாத்தா நீங்க உங்க கையால உருண்டை பிடிச்சு கொடுப்பீங்க இல்ல அப்படி சாப்பிடலாம் என்று லட்டு சொல்றா என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட ராமமூர்த்தி சந்தோஷம் அப்படியே பண்ணிடலாம் என்று சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அனைவருக்கும் உருட்டி கையில் கொடுக்கிறார்.

பாயாசம் எடுக்க வந்த பாக்யாவிடம் கோபி என் வீட்டில நான் ராஜா மாதிரி இருந்த ஆனா என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கினத்திற்கு காரணம் நீதான் நீ மட்டும் தான். என் மேல உயிரே வைத்திருந்த என் அம்மாவ பிரைன் வாஷ் பண்ணி மாத்திட்ட என்று சொல்ல உங்க மேல இருக்கிற தப்ப ஒத்துக்கவே மாட்டீங்களா என்று பாக்கியா கேட்டு கோபப்படுகிறார். இது எல்லாத்துக்கும் நீ ஒரு நாள் அனுபவிப்ப என்று கோபி கோபமாக பாக்யாவிடம் சொல்ல நீங்க இங்க இருந்து முதல்ல போயிடுங்க அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் பாக்யா.

குடும்பத்தினர் அனைவரும் பாயாசம் குடித்துக் கொண்டிருக்க ஈஸ்வரி நேரமாயிடுச்சு வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொன்னவுடன் எழில் மற்றும் அமிர்தா கிளம்பலாமா என்று கேட்டுவிட்டு சரியாக கிளம்பறோம் என்று சொல்ல அனைவரின் முகம் மாறுகிறது. ராமமூர்த்தி எழிலுடன் தனியாக பேச அழைத்துச் செல்கிறார்.

எழிலிடம் ராமமூர்த்தி என்ன பேசுகிறார்? அதற்கு எழில் கொடுக்கும் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial epiosde update 28-08-24