Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்யாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி. ராதிகா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்‌டில் இனியா பாக்யாவிடம் வந்து நாளைக்கு காலேஜ்ல ஒரு பங்க்ஷன் இருக்கு அதுக்காக புது ட்ரெஸ் வேணும் என்று சொல்ல பாக்கியா நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வந்து உன்னை கடைக்கு கூட்டிட்டு போய் டிரஸ் வாங்கி தரேன் என வாக்கு கொடுக்கிறார்.

மறுநாள் காலையில் பாக்கியா எழில் செல்வி ஆகியோர் பணத்தை ரெடி பண்ணிக் கொண்டு கேன்டீன் காண்ட்ராக்ட் எடுக்க கிளம்புகின்றனர். ஈஸ்வரி பணத்தை பறி கொடுத்துடுவியோனு பயமா இருக்கு மத்தபடி வேற எதுவும் இல்ல என்று சொல்ல கண்டிப்பா கான்டீன் காண்ட்ராக்ட் விட தான் வருவேன் என கூறிவிட்டு கிளம்பி செல்கிறார் பாக்யா.

இவர்கள் ஆபீஸில் டிடியை கொடுத்துவிட்டு காண்ட்ராக்ட்க்காக காத்திருக்க இங்கே இனியா அம்மாவை இன்னும் காணோம் டிரஸ் எடுக்க போகணும் என புலம்பி கொண்டு இருக்க ராதிகா நான் உன்னை கூட்டிப் போறேன் என்று சொல்ல ஈஸ்வரி போய்ட்டு வா என அனுப்பி வைக்கிறார்.

இங்கே ஆபீஸில் காண்ட்ராக்ட் எடுக்க வந்தாங்களாம் வாங்க என்று சொல்லி கூப்பிட பாக்யா ஆர்வமாக எழுந்து வர அவரைச் சுற்றி கிட்டத்தட்ட ஒரு 30 பேருக்கும் அதிகமானோர் வந்து நிற்க அதை பார்த்து குழப்பம் அடைகிறார். வேற ஏதாச்சு ஸ்டால் போட காண்ட்ராக்ட் எடுக்க வந்திருப்பாங்க என நினைத்துக் கொண்டு கான்பரன்ஸ் ரூம் செல்ல எல்லோரும் இதே கேன்டீன் காண்ட்ராக்டர்காக தான் வந்திருக்கின்றனர் என தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் 40 பேர் கேன்டீன் காண்ட்ராக்ட்க்கு அப்ளை பண்ணி இருப்பதால் குலுக்கல் முறையில் தான் ஒருவரை தேர்வு செய்யப் போவதாக சொல்ல பாக்கியாவுக்கு இன்னும் பதற்றம் அதிகமாகின்றது. குலுக்கல் முறையில் ஒருவரை தேர்வு செய்ய அதில் பாக்யாவின் பெயர் இல்லாததால் இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு கட்டின பணத்தை திருப்பி கொடுத்துவிடுவீர்களா என்று அதிகாரியிடம் விசாரிக்க அப்ளிகேஷன் பத்தாயிரம் திரும்ப வராது ஆனால் நீங்கள் அட்வான்ஸ் காட்டின ஒரு லட்சம் ரூபாய் உங்களுக்கு திரும்ப வந்துவிடும் என கூறுகிறார். இப்பவே வெயிட் பண்ணிட்டு வாங்கிட்டு போலாமா என்று கேட்க இல்ல அதுக்கான ப்ராசஸ் இருக்கு ஒரு மாசத்துக்குள்ள உங்களுக்கு பணம் வந்துடும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். நான் வீட்ல என்ன சொல்ல போறேன்? வேலை பண்ண உங்களுக்கு வேற வேலை கிடைக்கும்னு சொல்லி இருக்கேன் இப்ப நான் என்ன செய்வேன் என புலம்பி தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode
baakiyalakshimi serial episode