Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தோஷத்தில் குடும்பத்தினர், கோபி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode

ஃபங்ஷனில் எழில் மற்றும் அமிர்தா கலந்து கொள்கின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் ,அமிர்தா, நிலா பாப்பாவோட வர குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ராமமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர்.

தொடர்ந்து செழியனுக்கு ஃபோன் போட்டுக் கொண்டிருக்கும் கோபி செழியன் போனை எடுத்து உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்கிறார். காலையில எல்லாரும் கிளம்பி எங்க போனீங்க எழில் வெளியே போன நேரத்துல இந்த மாதிரி போனா நல்லா இருக்கும்மா என்று கேட்க எழில் வெளியே போனதுல உங்களைவிட எங்களுக்கு தான் வருத்தம் அதிகம் என்று சொல்லி ஆப் செய்கிறார். பிறகு எங்க போனீங்க என்று கேட்க இன்னைக்கு எங்க தாத்தாவோட பிறந்தநாள் என்று சொல்லுகிறார் செழியன். உடனே கோபி ஆமா இல்ல இன்னைக்கு அப்பாவோட பர்த்டே நான் எப்படி மறந்தேன் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கிறார். எந்த கோவில்ல என்று கேட்க தாத்தா வழக்கமா வர கோவில் என்று சொல்லி போனை வைக்கிறார்.

ஜெனி அப்பா வந்து வாழ்த்து தெரிவித்து கிப்ட் கொடுக்கிறார். பிறகு கோபி ராதிகாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி பாக்யா தான் காரணம் என திட்ட உங்க அப்பாவுடைய பிறந்தநாள் உங்களுக்கு தெரியலனா அவங்கள எதுக்கு திட்டறீங்க என்று கேட்கிறார். என்ன கூப்பிட்டா என்ன கூப்பிடலைன்னா என்ன நான் என்னோட அப்பா பிறந்தநாள் இப்போ போவேன் என்று சொல்லுகிறார் பிறகு ராதிகாவையும் கூப்பிட, நீங்களே போய் அசிங்கப்பட்டு தான் வர போறீங்க இதுல நான் வேற வரணுமா என்று பேசுகிறார். என்னை யாரு அசிங்கப்படுத்துவாங்க என்று கேட்க உங்க அம்மால இருந்து இனியா வரைக்கும் என்று சொல்லுகிறார்.

கோவிலுக்கு வந்தபோது அப்பா அம்மாவை பார்த்து சந்தோஷப்பட பாக்யாவை பார்த்து முறைக்கிறார். கோபி அப்பா என்று கூப்பிட அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.

ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி கோபியிடம் சொன்னது என்ன? கோபி எடுக்கப் போக முடிவு என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode
baakiyalakshimi serial episode